சென்னை: ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.5 கோடி நிதியில் ரூ.4 கோடியை அட்சயப் பாத்திர திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டினார். 2019-20ல் இரு தவணையாக அட்சயப் பாத்திரம் திட்டத்திற்கு வழங்கியுள்ளனர். எஞ்சிய ஒரு கோடி ரூபாயை ஆளுநர் மாளிகை கணக்கில் எங்கள் கண்ணுக்கே தெரியாத வகையில் வழங்கியுள்ளனர். ஒதுக்கப்பட்ட நிதியை சிஏஜி விதிமுறைகளை மீறி கையாண்டுள்ளனர்; ரூ.5 கோடியை மறைமுக கணக்கிற்கு எடுத்துச் சென்றுள்ளனர் எனவும் குற்றம் சாட்டினார்.