×

சேலத்தில் இருந்து சீரடிக்கு 35 நாட்கள் 1,207 கி.மீ தூரம் மிதிவண்டியில் சென்ற முதியவர்

சேலம்: சேலத்தில் இருந்து சீரடிக்கு 1,207 கி.மீ தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வெற்றியுடன் திரும்பிய 82 வயது முதியவருக்கு தாரை, தப்பட்டையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சேலத்தில் தக்கஸ் கிளப் தலைவராக இருந்து வரும் கனகசபாபதி தமது 82 வயதை கூட பொருட்படுத்தாமல் சேலத்திலிருந்து சீரடிக்கு மிதிவண்டியில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார்.

அதன்படி கடந்த பிப்ரவரி 16ம் தேதி சேலத்திலிருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கிய அவர் 35 நாட்கள் 1,207 கி.மீ தூரம் பயணித்து சீரடியில் நிறைவு செய்தார். சேலம் திரும்பிய முதியவர் கனகசபாபதிக்கு தாரை தப்பட்டை முழங்க கோலாட்டம் மயிலாட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சேலத்திலிருந்து சீரடிக்கு மிதிவண்டியில் சென்று வந்த 82 வயது முதியவர் கனகசபாபதிக்கு பல்வேறு தரப்பினர் சால்வை மற்றும் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.


Tags : Saleh ,Seradi , Salem - Seerdi, 35 days old man on bicycle
× RELATED தமிழ்நாடு மற்றும் புதுவையில் அனல்...