×

இண்டியா கூட்டணிக்கு மக்கள் கொடுத்துள்ள வரவேற்பு கோட்சேவைக் கொண்டாடும் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வருவதை உணர்த்தியுள்ளது : ஜவாஹிருல்லா

சென்னை : நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் காந்தியின் இந்தியாவுக்கு மக்களின் ஆதரவு கோட்சேவின் மதவெறி பாசிசத்திற்கு மறுதவிப்பு என்பதை உறுதிப்படுத்தியுள்ளது என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ-. அறிக்கை:

உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சுதந்திர இந்தியாவில் நடந்த தேர்தல்களில் இருவேறு கருத்துக்கள் நேரடியாக மோதிக் கொண்ட இந்த தேர்தலில் காந்தியக் கருத்தியலை ஓங்கி முழங்கிய இந்தியா கூட்டணிக்கு மக்கள் கொடுத்துள்ள வரவேற்பு காந்தியத்தை இழிவு செய்து கோட்சேவைக் கொண்டாடும் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வருவதை உணர்த்தியுள்ளது.

இந்த மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் ஒரு தலைப்பட்சமான செயல்பாடு மக்களுக்கு பேரதிர்ச்சியைத் தந்தது. பாஜகவின் முகமாக முன்னிறுத்தப்பட்ட பிரதமர் மோடி முஸ்லிம்களையும், தமிழ்நாட்டு மக்களையும் இழிவுபடுத்தி அவதூறாக பேசியதற்கு தேர்தல் ஆணையம் ஒரு நோட்டீஸ் கூட அனுப்பாமல் அக்கட்சியின் தலைவருக்கு அனுப்பியது மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

-* எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது ஒன்றிய அரசின் முகமைகள் வேட்டை நாயாக பாய்ந்தன.
* ஜார்கண்ட் முதல்வர் மற்றும் டெல்லி முதல்வர் சிறையிடப்பட்டனர்.
* திமுக அரசுக்கு சொல்லன்னா இன்னல்கள் பாஜகவால் தரப்பட்டது.
* காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது.
* பதிவான மொத்த வாக்குகளை அறிவதற்குக்கூட உச்சநீதிமன்றம் செல்ல வேண்டி இருந்தது.

அதேநேரம் பாஜகவின் தேர்தல் பத்திர ஊழல் உலகின் இமாலய ஊழலாக பேசப்பட்டது, மோடியின் பி.எம். கேர் ஊழல் உலகின் பெரிய ஊழலாக கருதப்பட்டது. பணபலம் அதிகார பலம் இவற்றோடு சுயசார்பு ஜனநாயக நிறுவனங்களையும் முடக்கி ஆட்கொண்டு ஊடகங்களை தனது காலடியில் பணிய வைத்து பாஜக தேர்தலை சந்தித்தது.

சம போட்டி இல்லாத சூழலிலும் இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை முன்னிறுத்திய கருத்துகளுக்கு மகத்தான வெற்றியை பெற்று தந்துள்ளது. இத்தகைய வலிமையோடு இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்த திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் சூழ்ச்சி வலைகளை அறுத்தெறிந்து இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு தேசத்தைத் தட்டி எழுப்பிய காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கும் இந்தியா கூட்டணியின் அனைத்து தலைவர்களுக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முதல் ஐந்து சுற்றில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவை சந்தித்ததும், வாரணாசிக்குப் பிறகு இந்துக்களின் இன்னொரு புனிதத் தலமான ராமேஸ்வரம் அமைந்துள்ள ராமநாதபுரம் தொகுதியில் முதல் சுற்றில் இருந்தே முஸ்லிம் லீக் வேட்பாளர் சகோதரர் கே. நவாஸ் கனி முன்னிலை வகித்ததும் ஒரு தெளிவான செய்தியை உணர்த்தி இருக்கிறது. காந்தியின் இந்தியா மீண்டெழும் என்பதற்கு இம்முடிவுகள் சான்றாக உள்ளன.

The post இண்டியா கூட்டணிக்கு மக்கள் கொடுத்துள்ள வரவேற்பு கோட்சேவைக் கொண்டாடும் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வருவதை உணர்த்தியுள்ளது : ஜவாஹிருல்லா appeared first on Dinakaran.

Tags : India Alliance ,Kotsha ,Jawahirulla ,Chennai ,Gandhi ,India ,Gotcha ,Humanist People's Party ,M. H. Jawahirulla ,
× RELATED 40க்கு 40 வெற்றியை வழங்கிய தமிழக...