×

மானாமதுரை அருகே எம்.கரிசல்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் வன்கொடுமை சட்டத்தில் கைது

சிவகங்கை: மானாமதுரை அருகே எம்.கரிசல்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் மாரிமுத்து, வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். டாஸ்மாக் ஊழியர் அய்யனாருக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதில் ஏற்பட்ட தகராறில் சாதியை கூறி தாக்கியதாக புகார் எழுந்தது. அய்யனார் அளித்த புகாரில் ஊராட்சித் தலைவர் மாரிமுத்துவை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் மாரிமுத்து, எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ளார்.

Tags : Panchayat council ,president ,M. Karisalkulam ,Manamadurai , Panchayat council president M. Karisalkulam near Manamadurai was arrested under the Atrocities Act
× RELATED கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய...