×

தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

காஞ்சிபுரம்: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, கல்லூரி முதல்வர் சரவணன் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் மணி, முதன்மை செயல் அலுவலர் விஜயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக நிர்வாக அறங்காவலர் கனிஷ்கா கலந்து கொண்டு பெண்களின் தனித்துவம் பற்றியும் பெண்களின் திறமைகள் பற்றியும் விரிவாக எடுத்துப் பேசினார்.

பின்னர், டாக்டர் புவனேஸ்வரி கலந்து கொண்டு பெண்கள் வாழ்வியல் பற்றியும், பெண்களின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்தும் பேசினார். இந்நிகழ்ச்சியில் பேச்சு, கட்டுரை, நடனம், ஓவியம், போன்ற போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், கல்லூரி துணை முதல்வர் ஜானகிராமன், பேராசிரியர்கள், மாணவ - மாணவிகள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில், முத்தரசி நன்றி கூறினார்.

Tags : Women's Day ,Thanalakshmi ,Srinivasan College , Women's Day Celebration at Thanalakshmi Srinivasan College
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...