சென்னை புறநகர் பகுதி கடைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது

தாம்பரம்: சென்னை புறநகர் பகுதிகளில் கடைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். தாம்பரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் சகிலா மற்றும் தனிப்படையினர் தாம்பரம் காந்திரோடு, செக்போஸ்ட் அருகே நேற்று முன்தினம் மாலை வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.  அப்போது சந்தேகப்படும்படி இருச்சர வாகனத்தில் வந்த மதுரவாயலைச் சேர்ந்த சரவணன் (எ) டோரி சரவணன் (52) என்பவரை பிடித்து விசாரித்தபோது, அவர் தாம்பரம் பகுதியில் மூடியிருக்கும் கடைகளின் பூட்டை உடைத்து கல்லாவில் உள்ள பணத்தை திருடும் செயலில் ஈடுபட்டு வந்தவர் என்பதும், கடந்த வருடம் இரும்புலியூர் பகுதியில் ஒரு கடையிலும், தாம்பரம் முல்லைநகரில் உள்ள ஒரு கடையிலும் கடையை உடைத்து கல்லாவில் இருந்த பணத்தை திருடியதும் தெரிய வந்தது. மேலும் அவர் இந்த வருடத்தில் சென்னை கே.கே.நகரிலும், புறநகர் பகுதியாக மதுரவாயிலிலும் இரவலில் பூட்டியிருக்கும் கடைகளை உடைத்து பணத்தை திருடி ஜெயிலுக்கு சென்று வந்துள்ளார்.  இவர் கடந்த 2002ம் ஆண்டு தன்னுடைய 6 வயது மகனைக் கொன்ற வழக்கில் கோயம்பேடு போலீசாரால் கைதானதும் தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories: