×

பிறந்து ஒருநாளான குழந்தைக்கு சிக்கலான மூளை அறுவை சிகிச்சை: எம்ஜிஎம் ஹெல்த்கேர் சாதனை

சென்னை: சென்னை மாநகரின் மையப்பகுதியில் பல்வேறு சிறப்பு பிரிவுகளுடன் இயங்கும் எம்ஜிஎம் ஹெல்த்கேர், ஒரு சிக்கலான மூளை அறுவைசிகிச்சையை பிறந்து ஒரு நாளானா பச்சிளங்குழந்தைக்கு வெற்றிகரமாக செய்து அதன் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது.  எம்ஜிஎம் ஹெல்த்கேரின் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவிற்கு, பிறந்து ஒரு நாள் மட்டுமே ஆன ஒரு பச்சிளங்குழந்தை அழைத்து வரப்பட்டது. அக்குழந்தை களைப்பாகவும், மயக்கநிலையிலும் இருந்தது. அத்துடன், தாயிடமிருந்து தாய்ப்பால் அருந்துவதை முற்றிலுமாக தவிர்த்த நிலையில் இருந்த இக்குழந்தைக்கு, விரிவான மருத்துவ பரிசோதனையும் மற்றும் எம்ஆர்ஐ சோதனையும் செய்யப்பட்டது. அதில், மூளை தண்டை கனமாக அழுத்துகிற ஒரு பெரிய இரத்த உறைகட்டி அக்குழந்தைக்கு இருப்பதும், மூளைக்கு இயல்பான அளவு இரத்த ஓட்டம் இருப்பதை அது தடுப்பதும் கண்டறியப்பட்டது.

சுவாசம், இதயத்துடிப்பு மற்றும் உணர்வு நிலையை பராமரிப்பது போன்ற நம் உடலின் இன்றியமையா செயல்பாடுகள் இந்த மூளைத் தண்டினால் தான் கட்டுப்படுத்தப்படுகின்றன. மூளையின் இப்பகுதி, அழுத்தத்திற்கு ஆளாகும்போது மேற்கூறப்பட்ட செயல்பாடுகள் அனைத்தையும் இது பாதிக்கும். எனவே இக்குழந்தைக்கு மூளையில் இருந்த இரத்த உறைகட்டியை அகற்றுவதே ஒரே உடனடி தீர்வாக இருந்தது. உடனடியாக, எம்ஜிஎம் ஹெல்த்கேரின் குழந்தைகள் நல  மருத்துவரும், கை - கால் வலிப்பு மற்றும் நகர்வு கோளாறுக்கான அறுவை  சிகிச்சை மருத்துவருமான எல்.எஸ்.ஹரிஷ்சந்திரா, பச்சிளம் குழந்தைகளுக்கான  தீவிர சிகிச்சை பிரிவின் தலைவர் மருத்துவர் பினு நினன் தலைமையிலான  குழுவினரின் ஆதரவோடு இந்த அறுவைசிகிச்சையை மேற்கொண்டார். ஒரு  நாளுக்கு முன்பு பிறந்த பச்சிளங்குழந்தையின் மூளையில் இருந்த இரத்த உறை  கட்டியை அகற்றுவதற்காக மிகவும் நுட்பமான இரு படிநிலைகள் கொண்ட  அறுவைசிகிச்சை செயல்முறை உரிய நேரத்திற்குள் செய்யப்பட்டதன் மூலம்  இக்குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. தற்போது, குழந்தை நலமாக உள்ளது, என மருத்துவர்கள் தெரிவித்தனர்.



Tags : MGM Healthcare , Complex brain surgery on a one-day-old baby: MGM Healthcare feat
× RELATED சென்னை லீ மெரிடியன் ஓட்டல் வழக்கு:...