×

ஜப்பான், சீன தலைவர்கள் உக்ரைன், ரஷ்யாவுக்கு பயணம்

கீவ்:  சீனா மற்றும் ஜப்பான்  தலைவர்கள்  ரஷ்யா, உக்ரைன்  நாடுகளுக்கு பயணம்  மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. இந்நிலையில்,ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா  திடீரெனுக்கு உக்ரைனுக்கு விஜயம் செய்தார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசிய கிஷிடா புச்சா நகரில் உள்ள  கிறிஸ்தவ ஆலயத்தில் போரில் உயிரிழந்தவர்களுக்கு மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார். உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த கிஷிடா,‘‘ இந்த கொடிய தாக்குதலில் தங்களுடைய நெருங்கிய உறவுகளை இழந்தவர்களுக்கு என்னுடைய அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார்.

அதே போல் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும்  3 நாள் பயணமாக ரஷ்யாவுக்கு சென்றுள்ளார்.  ரஷ்ய அதிபர் புடினுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்புக்கு பிறகு, ரஷ்ய- சீன அதிபர்கள் கூட்டறிக்கை வெளியிட்டனர்.
அதில், இரு நாடுகள் இடையே ராணுவ ஒத்துழைப்பு அதிகரிக்கப்பட்டு, கடல் மற்றும் வான்வெளியில்  இரு நாட்டு படைகளும் கூட்டு  கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.  ஆசிய நாடுகளின் தலைவர்கள் ஒரே நேரத்தில் ரஷ்யா, உக்ரைன் சென்றது    பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Tags : Japan ,China ,Ukraine ,Russia , Japan, China leaders visit Ukraine, Russia
× RELATED ஜப்பான் நாட்டுடன் இணைந்து வெள்ளத்...