×

தேவனாம்பட்டினம் கடற்கரையில் ஆமை பொறிப்பகத்தில் பொரித்த ஆமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

கடலூர்:  தேவனாம்பட்டினம் கடற்கரையில் சில்வர் பீசில் ஆமைக் குஞ்சுகள் கடலில் விடும் நிகழ்ச்சி நடந்தது. ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆமைகளின் இனப்பெருக்க காலம் ஆகும். இந்த காலத்தில் கடலூர் மாவட்டத்தின் கடலோர கிராமங்களில்  ஆமைகள் முட்டை இட்டுச் செல்வது வழக்கம். இந்த முட்டைகள் பாதுகாப்பாக இருக்க தமிழ்நாடு வனத்துறையினர் ஒவ்வொரு கடலோர கிராமங்களிலும் ஆமை குஞ்சுகள் பொரிப்பகம் அமைத்து ஆமை முட்டைகளை சேகரித்து அங்கே பாதுகாத்து முட்டைகள் இருந்து வரப்படும் ஆமை குஞ்சுகளை மீண்டும் கடலுக்குள் அனுப்புவது வாடிக்கையாக உள்ளது.

கடந்த டிசம்பர் முதல் மார்ச் வரை 110 ஆமைகளிலிருந்து 11,500 முட்டைகள் சேகரித்து தேவானம் பட்டினத்தில் உள்ள பொறிப்பகத்தில் வைத்து பாதுகாக்கபட்டன. இந்த ஆண்டு கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில்  வனத்துறையினர் ஆமை முட்டை கடலில் விடும் நிகழ்ச்சியை  கொண்டாடினர். இதில் முதல்கட்டமாக பொறித்த குஞ்சுகளை மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா மற்றும் தன்னார்வலர்கள் கடலில் விட்டனர். மலர் தூவி இந்த ஆமைக்குஞ்சுகள் விட்டபோது அவை தத்தி தத்தி கடலில் சென்ற காட்சி பார்ப்போரை வெகுவாக கவர்ந்தது.


Tags : Devanampatnam Beach , Devanampattinam, beach, fried turtles, collection
× RELATED திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார்...