×
Saravana Stores

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 துணைத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 2023-2024ஆம் ஆண்டிற்க்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ம் தேதியும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மே 14ஆம் தேதி வெளியானது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, மே 16ஆம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

தற்பொழுது, துணைத் தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஜூன் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல், பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஜூலை 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடக்க உள்ளது. இதற்கான விரிவான விளக்கம் பின்வருமாறு;

பிளஸ் 2 துணைத்தேர்வு அட்டவணை

ஜூன் 24 – மொழிப்பாடம், ஜூன் 25- ஆங்கிலம், ஜூன் 26- ஜூன் 27- வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், ஜூன் 27- கணினி அறிவியல், புள்ளிவிவரங்கள், உயிர் வேதியியல், ஜூன் 28- இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம், ஜூன் 29 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் ஜூலை-1 கணிதம், விலங்கியல், வர்த்தகம் , வர்த்தகம், மைக்ரோ உயிரியல் தேர்வுகள் நடைபெற உள்ளன.

பிளஸ் 1 துணைத்தேர்வு அட்டவணை

ஜூலை 2- மொழிப்பாடம், ஜூலை 3 ஆங்கிலம், ஜூலை 4- இயற்பியல், பொருளாதாரம், ஜூலை 5- கணினி, ஜூலை 6- தாவரவியல், வரலாறு, ஜூலை 8- கணிதம், வணிகவியல் ஜூலை 9- வேதியியல், கணக்கியல் தேர்வுகள் நடைபெற உள்ளன.

The post தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை appeared first on Dinakaran.

Tags : School Education Department ,Tamil Nadu ,Chennai ,
× RELATED ஆசிரியர் கோரிக்கைகள் தேர்தலுக்குள்...