×

திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் பிறந்தநாள் விழா விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு: எம்எல்ஏக்கள் வழங்கினர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு எம்எல்ஏக்கள் எஸ்.சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் பரிசு வழங்கினர். திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சத்தரை கிராமத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத் தலைவர் சரஸ்வதி ரமேஷ், மனோஜ் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். மாவட்ட அவைத்தலைவர் திராவிடபக்தன், மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆதிசேஷன், மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி சந்திரசேகர், கோதண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ., திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தையல் இயந்திரங்கள், இஸ்திரி பெட்டிகள், சேலை மற்றும் 700 பெண்களுக்கு சில்வர் பாத்திரங்கள் ஆகியவற்றை வழங்கினர்.பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரத்தை ஊராட்சி மன்றத் தலைவர் உமா மணிகண்டன், 2ம் பரிசாக ரூ.15 ஆயிரத்தை டேனியேல், 3ம் பரிசாக ரூ.10 ஆயிரத்தை ரவி, 4ம் பரிசாக ரூ.5 ஆயிரத்தை சந்திரசேகர், 5ம் பரிசாக ரூ.3 ஆயிரத்தை உதயம், தயாளன் ஆகியோர் சார்பில் வழங்கும் விழாவும், இருளஞ்சேரியில் ஊராட்சி தலைவர் தமிழ்மொழி ராமச்சந்திரன் ஏற்பாட்டில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், பெண்களுக்கு சேலைகள் வழங்கும் விழாவும், இதனையடுத்து கொண்டஞ்சேரியில் ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.

இந்த விழாக்களில் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில் மாவட்ட பொருளாளர் மீதுன், காஞ்சிப்பாடி சரவணன், ஒன்றிய நிர்வாகிகள் கோபால், ரவி, காமராஜ், டாக்டர் முரளி, ஜெயவேல், ஒன்றிய கவுன்சிலர் வழக்கறிஞர் கார்த்திக், ஜெகஜீவன்ராம், சரத், டேனியேல், ஆறுமுகம், தினேஷ், சிவக்குமார், சுபப்பிரியா சக்திதாசன், பாபு, சதீஷ், பிரபாகரன், முத்து, சச்சின், ரூபா், ஆல்வின் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tags : Thiruvallur ,District ,Chief Minister ,Birthday Celebration , Thiruvallur District Chief Minister's Birthday Celebration Sports Prize Winners: MLAs Present
× RELATED அகரம், பாலவாக்கம் பகுதிகளில் பொங்கல்...