×

பாம்பன் விசைப்படகு மீனவருக்கு அடித்தது ஜாக்பாட்; ஒரு படகில் 4 டன் மீன் சிக்கியதால் மகிழ்ச்சி

ராமேஸ்வரம்: பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து நேற்று மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடலில் மீன்பிடித்து இன்று காலையில் மீனவர்கள் கரை திரும்பினர். இதில் பிரவீன் என்பவரின் ஒரு விசைப்படகில் மட்டும் சுமார் நான்கு டன் வரை கட்டா மீன் சிக்கியது. மிகுந்த மகிழ்ச்சியுடன் கரைக்கு வந்த மீனவர்கள் கூடை கூடையாக மீன்களை இறக்கினர். சுட்டாலும் மனக்காது கட்டா என்கிற தன்மை கொண்ட இந்த மீன் பெரும்பாலும் கருவாட்டுக்கு பயன்படுத்தப்படும். தன் கணக்கில் வந்த மீன்களை கருவாடாக மாற்ற வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

Tags : Pompon barge hits jackpot for fisherman; Happy to catch 4 tons of fish in a boat
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...