×

சென்னை கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பில் இளம்பெண் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி

சென்னை: சென்னை கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பில் இளம்பெண் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். காதலனுடன் மதுஅருந்திய நிலையில் மாடியில் இருந்து கீழே குதித்து இளம்பெண் சோனாலி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். மாடியில் இருந்து குதித்ததில் இடுப்பு எலும்பு, கால்கள் முறிந்ததால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இளம்பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளம்பெண் சோனாலி, நேற்று முன்தினம் நள்ளிரவில் திருவல்லிக்கேணியில் தனது தோழிகளுடன் குடிபோதையில் ரகளையில் ஈடுப்பட்டார். சோனாலி உள்பட 6 இளம்பெண்கள் மதுபோதையில் பேருந்து முன் படுத்துக்கொண்டு நேற்று முன்தினம் ரகளையில் ஈடுபட்டனர்.Tags : Chennai ,Gangi Nagar , A young girl attempted suicide by jumping from the 4th floor in Chennai's Kannagi Nagar Tsunami flat
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்