சீனாவை பாராட்டுகிறார், இந்தியாவை இகழ்கிறார்: ராகுல் மீது ஜெய்சங்கர் பாய்ச்சல்

புதுடெல்லி: ராகுல்காந்தி தனது லண்டன் சுற்றுப்பயணத்தில் சீனாவை பாராட்டும் போது இந்தியாவை இகழ்ச்சி செய்கிறார் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்தார். டெல்லியில் நடந்த மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: ஒரு இந்திய குடிமகனாக, யாரோ ஒருவர் சீனாவை பாராட்டுவதையும், இந்தியாவை  நிராகரிப்பதையும் பார்க்கும்போது நான் கவலையடைகிறேன் சீனா மிகப்பெரிய உற்பத்தியாளர் எனறு அவர் பாராட்டுகிறார்.  

ஆனால் இந்தியாவில் உற்பத்தி என்று வரும்போது குறைத்து பேசுகிறார். ‘மேக் இன் இந்தியா’ வேலை செய்யாது என்று அவர் கூறுகிறார். அதாவது நாம் கோவாக்சின் தயாரிக்கும் போது காங்கிரஸ் கட்சி கோவாக்சின் வேலை செய்யாது என்று கூறியது. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு   தெரிவித்தார்.

Related Stories: