×

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியா ? ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்..!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பரவிய தகவலுக்கு ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார். அக்கட்சியில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வரும் 26-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றும், நாளையும் நடக்கிறது. இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பில் விருப்ப மனு தாக்கல் செய்ய இருப்பதாக செய்தி வெளியானது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அதிமுகவின் நிறுவனரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட, கழக நிரந்தரப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட சட்டதிட்ட விதிகளுக்கு முற்றிலும் முரணாக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அட்டவணை சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை (19-03-2023 – ஞாயிற்றுக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில், கழகத் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்தும் வகையில், கழக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் அவர்கள் சார்பில் பொதுச் செயலாளர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்யப்படுவதாக ஊடகங்களில் தவறான செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது. இது முற்றிலும் உண்மைக்கு மாறானது. என குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : secretary of ,O.O. ,Bannerselvam , AIADMK general secretary contest? O. Panneerselvam Explanation..!
× RELATED கோவையில் பாஜகவுக்காக தேர்தல்...