×

தமிழக மீனவர்கள் 12 பேர் விடுவிப்பு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர் விஜயா. இவருக்கு சொந்தமான விசைப்படகில், அதே பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 12ம் தேதி அதிகாலை கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். நீதிமன்ற காவல் முடிந்து நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 12 பேரையும், விடுதலை செய்து இலங்கை பருத்திதுறை நீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்கள் அனைவரும் விரைவில் தமிழகம் திரும்ப உள்ளனர்.

Tags : Tamil Nadu , 12 Tamil Nadu fishermen released
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...