×

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 188 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலிய அணி!

மும்பை: இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 188 ரன்களில் சுருண்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டி முடிவுற்ற நிலையில் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்தியாவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 35.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி 65 பந்துகளில் 81 ரன்களை குவித்தார்.

இந்திய அணி தரப்பில் முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், கேப்டன் பாண்டியா, குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

Tags : Indian team , The Australian team was bowled out for 188 runs in the first ODI match against the Indian team!
× RELATED இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்...