டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு வரும் 20ம் தேதி ஆஜராக வேண்டும் கவிதாவுக்கு அமலாக்கத்துறை உத்தரவு

புதுடெல்லி:  டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா எம்எல்சி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கடந்த 11ம் தேதி  டெல்லி,அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். இதையடுத்து அவரை 16ம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத்துறை உத்தரவிட்டது.

இந்நிலையில் அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜராகவில்லை.  அவருக்கு பதில் அவருடைய பிரதிநிதியாக கட்சி நிர்வாகி ஒருவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.  இந்த வழக்கில் அவர் வரும் 20ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: