புதுடெல்லி: மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்து மூலமாக அளித்த பதிலில், ‘‘மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான முதல் சோதனை வருகிற மே மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு இறுதியில் ககன்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்படும். ககன்யான் திட்டத்திற்காக கடந்த அக்டோபர் வரை மொத்தம் ரூ.3,040 கோடி செலவிடப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
