×

துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.60.67 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து ஏர்இந்தியா விமானம், நேற்று முன்தினம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்கி  சென்று விட்டனர். பின்னர், அந்த விமானம் உள்நாட்டு விமானமாக சென்னையில் இருந்து, டெல்லிக்கு புறப்பட்டு செல்ல இருந்தது.

இதனால், ஏர் இந்தியா விமான லோடர்கள், விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விமானத்தின் கழிவறையில்  உள்ள தண்ணீர் தொட்டியில், பார்சல் ஒன்று கிடந்தது. அதை எடுத்து ஆய்வு  செய்ததில், 1.24 கிலோ தங்க பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.60.67 லட்சம். அதை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து, இதை கடத்தி வந்த பயணியை தேடி வருகின்றனர்.

Tags : Dubai , 60.67 lakh gold seized from Dubai
× RELATED சென்னை- துபாய் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்