அதிமுக எதிர்வினை ஆற்றினால்... பாஜவுக்கு மீண்டும் எச்சரிக்கை: கடம்பூர் ராஜூ அதிரடி

கோவில்பட்டி: அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ நேற்று கோவில்பட்டியில் அளித்த பேட்டி: எடப்பாடி படம் எரிப்பு குறித்து பாஜ பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி தொடர்பு கொண்டு போலீசாரிடம் அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ஆனால், சம்பந்தப்பட்ட பாஜ நிர்வாகி பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட மீண்டும் பொறுப்பில் இணைத்துள்ளனர். எனவே எடப்பாடி படத்தை எரித்தவர்கள் மீது சட்டரீதியாக  அதிமுக நடவடிக்கை மேற்கொள்ளும். இதுபோன்று சில இடங்களில் நடக்கும் சம்பவங்களை பாஜ கண்டிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. இதுபோன்ற வளர்ச்சி பெறாத, முதிர்ச்சி பெறாதவர்கள் செய்யும் சிறிய பிரச்னைகளுக்கு அதிமுக தொண்டர்கள் எதிர்வினை ஆற்றத் தொடங்கினால் நாடு தாங்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: