- பாஜா
- முகம்மது இறை
- கோவாய்
- திருப்பூர் பாஜா
- தமுக கோவா மத்திய மாவட்டம்
- ஜனாதிபதி
- Sarbuddin
- கோவா மாவட்டம்
- எஸ்பி பத்ரீநாராயன்
- குன்னத்தூர்
கோவை: முகமது நபிகள் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பதிவிட்ட திருப்பூர் பாஜ நிர்வாகி கைது செய்யப்பட்டார். தமுமுக கோவை மத்திய மாவட்ட தலைவர் சர்புதீன் மற்றும் நிர்வாகிகள் கோவை மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணனிடம் நேற்று அளித்த புகார் மனுவில், “குன்னத்தூர் முதல்வர்” என்ற முகநூல் கணக்கில் இஸ்லாமியர்கள் உயிருக்கும் மேலாக மதிக்கின்ற முகமது நபிகள் (ஸல்) பற்றி கொச்சையாக பதிவு செய்துள்ளனர். இஸ்லாமிய தலைவர்கள் பற்றியும் கீழ்த்தரமாக பதிவு செய்துள்ளனர்.
இந்த பதிவு வெளியிட்ட நபரை கைது செய்து சிறையில் அடைத்து, உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என கூறியுள்ளனர். இதையடுத்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அப்போது, அவதூறு பதிவு வெளியிட்டவர் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த பாஜ ஊடக பிரிவு மண்டல தலைவர் நந்தகுமார் (32) என தெரியவந்தது. அவரை, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நேற்று மாலை எஸ்பி அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரித்து கைது செய்தனர்.
The post முகமது நபிகள் பற்றி அவதூறு பாஜ நிர்வாகி கைது appeared first on Dinakaran.