நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 4 செ.மீ மழை பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 4 செ.மீ  மழை பதிவாகியுள்ளது. வால்பாறை, சின்னக்கல்லார், சின்கோனா ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் தேவாலா, வுட் பிரையர் எஸ்டேட் மற்றும் தேனி மாவட்டம் பெரியாறு பகுதியில் தலா ஒரு செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  

Related Stories: