×

1,827 என் ஜி ஓக்கள் உரிமம் ரத்து

ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் அளித்த பதிலில், ‘‘கடந்த 3 ஆண்டுகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ரூ.2,430.84 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றுள்ளன. 2021-22ம் ஆண்டில் ரூ.905.50 கோடியும், 2020-21ம் ஆண்டில் ரூ.798.18 கோடியும், 2019-20ம் ஆண்டில் ரூ.727.16 கோடியும் வெளிநாட்டு நிதியாக பெற்றுள்ளன.  கடந்த 10ம் தேதி வரையிலான நிலவரப்படி, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் உரிமம் பெற்றுள்ள 16,383 என்ஜிஓக்களில் 14,966 அமைப்புகள், 2021-22 நிதியாண்டிற்கான வருமான சான்றுகளை சமர்ப்பித்துள்ளன. 2018 முதல் 2022 வரை சட்டம் மற்றும் விதிமுறைகளை மீறியதற்காக 1,827 என்ஜிஓக்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.





Tags : License cancellation of 1,827 NGOs
× RELATED பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட...