×

நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய பகுதியில் 59 அரசு பள்ளிகளில் உயர்தர அறிவுத்திறன் வகுப்பறைகள் தொடங்கிவைப்பு

நெல்லை: நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய பகுதியில் 59 அரசு பள்ளிகளில் உயர்தர அறிவுத்திறன் வகுப்பறைகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்கள். திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி சுப்புலெட்சுமி திருமண மண்டபத்தில், இன்று (14.03.22023) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 59 அரசு பள்ளிகளில் உயர்தர அறிவுத்திறன் வகுப்பறைகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பபன், மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்ததாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெட்ரிக் பள்ளி, சி.பி.எஸ்.இ பள்ளி பயிலும் மாணவ மாணவிகளுக்கு இணையாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், சர்வதேச தரத்தில் கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் முதலமைச்சர் இந்த சிறப்பான திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளியில் ஒரு உயர்தர வகுப்பறை, வகுப்பறைக்கு ஒரு தொடுத்திரையுடன் கூடிய தொலைக்காட்சி அமைத்துக் கொடுப்பது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உயர்ந்த எண்ணம்.

தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்பட்டு வந்தாலும், திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி பகுதிக்குட்பட்ட அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை சிறப்பாக செயல்பட்டு வருவதை தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்குவதற்கு சட்டமன்ற உறுப்பினர் நிதி, கம்பெனி சமூக பொறுப்பு நிதியுடன் இணைந்து 300 பள்ளிகளுக்கு இந்த மாதத்திற்குள் இந்த வாய்ப்பை உருவாக்கி தருவோம். இந்த தொடுத்திரையில் அறிவியல், சமூகவியல், பொதுஅறிவு போன்ற அனைத்தும் ஒரே இடத்தில் அறிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

அறிவுத்திறன் வகுப்பின் மூலம் மாணவர்களின் கல்வி திறன் உயர்ந்துள்ளது. புதமைபெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், போன்ற சிறப்பான திட்டங்கள் மூலம் இந்தியாவில் உயர்கல்வியில் தமிழகம் தலை சிறந்த மாநிலமாக உள்ளது என மு.அப்பாவு தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்ததாவது: முதலமைச்சர், ஏழை எளிய பள்ளி மாணவ, மாணவியர்களும் உயர்தர கல்வி பயில வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைத்து கொடுத்துள்ளார்கள்.

தமிழ்நாட்டில் வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே பயில முடியும் என்கின்ற நிலையின்றி கிரமப்புறங்களில் உள்ள ஊராட்சி பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவ, மாணவியர்களும் உயர்தர கல்வியை வழங்க முடியும் என்கின்ற வாய்ப்பு தமிழ்நாட்டிலேயே அதிகளவு திருநெல்வேலி மாவட்டத்தில் தான் முதல்முறையாக ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர்களின் முயற்சியால் ஸ்மார்ட் வகுப்பறைகள் இன்று துவங்கப்பட்டுள்ளது.

கல்வியில் சிறந்த மாவட்டமாக திருநெல்வேலி மாவட்டம் திகழ்கிறது. ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள தொடக்கபள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் புதிதாக கட்டுவதற்கும் அதுவும் உயர்நிலை கல்லூரிகளில் இருக்கும் வசதிகளை விட மேலான வசதிகளை கொண்ட சுகாதாரமான, காற்றோட்டமான வகுப்பறைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சுகாதாரமான கழிப்பறை வசதிகள் செய்திடவும் இதுவரை இல்லாத புதிய வடிவமைப்பில் பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். எனவே இந்த ஸ்மார்ட் வகுப்பறைகளை பள்ளி மாணவ, மாணவியர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு எதிர்காலத்தில் சிறந்த கல்வியாளராக உருவாக வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்கள்.

இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி, நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய தலைவர் சௌமியா ஆரோக்கிய எட்வின், மாவட்ட கல்வி அலுவலர் ஜான், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் கனகராஜ் சாலமோன்டேவிட், பாஸ்கர், மகேஷ்குமார், அருணதவசு, ஜான்ஸ்ரூபா, லிங்கசாந்தி, சத்தியவாணிமுத்து, கிருஷ்ணவேணி, தனிதங்கம், உட்பட அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Tags : Nanguneri ,Puradaksha ,Union , Inauguration of High Quality Intelligence Classrooms in 59 Government Schools in Nanguneri Panchayat Union Area
× RELATED “ராபர்ட் ப்ரூஸுக்கு அர்ப்பணிப்புடன்...