×

போலி பத்திரம், கள்ளநோட்டு அச்சடிப்பு: கம்பத்தில் கேரள கும்பல் சிக்கியது

கம்பம்: கம்பத்தில் போலி பத்திரம் மற்றும் கள்ளநோட்டுகளை அச்சடித்த கேரளாவை சேர்ந்த இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள மெட்டு சாலை பதினெட்டாம் கால்வாய் அருகே, கம்பம் வடக்கு காவல்நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த கேரள பதிவெண் கொண்ட வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் வந்த நபர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு முன்னுக்கு பின் முரணான பதில் அளித்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ‘அவர்கள் இருவரும் இடுக்கி மாவட்டம் பாரத்தோடு கிராமத்தை சேர்ந்த முகமது ஜியாத் (41), சிரட்டவேலிலை சேர்ந்த பிபின் தாமஸ் (36) என்பது தெரியவந்தது.

இவர்கள் கம்பம் பகுதியில் உள்ள 15வது வார்டு ஓடைக்கரை தெருவில் உள்ள கோபி கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான வீட்டினை வாடகைக்கு எடுத்து அந்த வீட்டில் போலி முத்திரைத்தாள்கள் மற்றும் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்து, இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் முத்திரைத்தாள்கள் போலியாக அச்சடிக்க பயன்படுத்த இடத்துக்கு சென்று ரூ.5000 மதிப்பு உள்ள 4 முத்திரைத்தாள், 1000 மதிப்பு உள்ள 4 முத்திரைத்தாள், 100 மதிப்பு உள்ள 3 முத்திரைத்தாள், பின்பக்கம் மட்டும் அச்சிடப்பட்ட வெட்டப்படாத 500 ரூபாய் தாள் அடங்கிய ஏ4 சீட் 1, முத்திரைத்தாள் அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட கேனான் பிரிண்டர் ஜீப், உள்ளிட்ட பொருட்களை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.




Tags : Kerala ,Kamba , Forgery, counterfeiting, printing, Kerala gang, caught
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...