×

2026ம் ஆண்டுக்குள் இந்தியா இந்து ராஷ்ட்ரா என அறிவிக்கப்படும்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜ எம்எல்ஏ பேச்சு

புனே: வருகிற 2026ம் ஆண்டுக்குள் இந்தியா இந்து ராஷ்ட்ரா என அறிவிக்கப்படும் என்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ டி ராஜா சிங் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள ரஹடாவில் இந்துத்வா அமைப்புக்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜ எம்எல்ஏ டி.ராஜா சிங் கலந்து கொண்டு பேசியதாவது; இந்துக்கள் நாட்டை அகண்ட இந்து ராஷ்ட்ரா என மாற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றனர். 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகளும், 150க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ நாடுகளும் இருக்க முடியும் என்றால் 100மில்லியன் மக்களில் இந்துக்கள் பெரும்பான்மை இருப்பதால் இந்தியாவை ஏன் இந்து ராஷ்டிராவாக அறிவிக்க முடியாது? என்ன வந்தாலும் 2026ம் ஆண்டில் இந்தியா இந்து ராஷ்டிராவாக அறிவிக்கப்படும். இதனை நான் கூறவில்லை. இந்து மத தலைவர்களின் தீர்க்கதரிசனமாக உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Tags : India ,BJP ,MLA , India to be declared Hindu Rashtra by 2026: Suspended BJP MLA's speech
× RELATED புதுச்சேரியில் பொங்கல் உதவி தொகையாக ரூ.3000 வழங்க துணை நிலை ஆளுநர் உத்தரவு..!!