×

பாகிஸ்தான் குழந்தைகளுக்கு எதிர்காலம் இல்லை: இம்ரான் கான் கவலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் கூட்டம் ஒன்றில் பேசுகையில், ‘பாகிஸ்தான் ஏற்பட்டுள்ள பொருளாதார ெநருக்கடி தொடர்பாகவும், பாகிஸ்தான் எவ்வாறு அழிவை நோக்கி செல்கிறது என்பதை இந்திய டிவி சேனல்கள் மகிழ்ச்சியுடன் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்தபோது, ‘அந்த நாடு  அதிக நாட்கள் உயிர் வாழ முடியாது; விரைவில் இந்தியாவுடன் பாகிஸ்தான் இணையும்’ என்று இந்தியர்கள் கேலி செய்தனர்.

ஆளுங்கட்சி தலைவர்களுக்கு பாகிஸ்தானிலும் வெளிநாடுகளிலும் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. அவர்கள் பாகிஸ்தான் மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. பாகிஸ்தானில் சட்டத்தின் ஆட்சி இல்லை. பாகிஸ்தான் குழந்தைகளுக்கு எதிர்காலம் இல்லை’ என்றார்.

Tags : Pakistan ,Imran Khan , Pakistan's children have no future: Imran Khan worried
× RELATED பாக். தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக...