கிறைஸ்ட்சர்ச்: இலங்கை அணியுடனான் முதல் டெஸ்டில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறது. ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச... இலங்கை முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 305 ரன் குவித்திருந்தது. நேற்றைய 2வது நாள் ஆட்டத்தில் அந்த அணி 355 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது.
கருணரத்னே 50, குசால் 87, மேத்யூஸ் 47, சண்டிமல் 39, தனஞ்ஜெயா 46, கசுன் ரஜிதா 22 ரன், ஒஷதா, பிரபாத், லாகிரு குமாரா* தலா 13 ரன் எடுத்தனர். டிம் சவுத்தீ 5, மேத்யூ ஹென்றி 4, பிரேஸ்வெல் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்்கிய நியூசி., 2ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்துள்ளது. டாம் லாதம் 67, கான்வே 30 ரன் எடுக்க, வில்லியம்சன் 1, நிகோல்ஸ் 2, பிளண்டெல் 7 ரன்னில் வெளியேறினர். டேரில் மிட்செல் 40 ரன், பிரேஸ்வெல் 9 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.
