×

பூந்தமல்லி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

திருவள்ளூர்:  பூந்தமல்லி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளவேட்டில் நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவருமான டி.தேசங்கு தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஜி.ஆர்.திருமலை, ஒன்றிய குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், ஒன்றிய நிர்வாகிகள் இ.கந்தபாபு, சி.அண்ணாகுமார், ஜே.சாக்ரடீஸ், ஜி.சுகுமார், ப.கந்தன், எம்.குணசேகரன், ஜிசிசி.கருணாநிதி, இவிபி.பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் சுமதி விஜயகுமார், கே.கோபிநாத், காந்திமதி கேசவன், பி.சி.மூர்த்தி, என்.முனுசாமி, கே.வெங்கடேசன், விஜயகுமார், ஜி.பலராமன், எம்.மோகன், ஜே.ராஜேஷ், அண்ணாமலை ஆகியோர் வரவேற்றனர்.

விழாவில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு 1000 பேருக்கு சேலை, சில்வர் பாத்திரங்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். மேலும் மாநில நிர்வாகிகள் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, நடுக்குத்தகை கே.ஜெ.ரமேஷ் சி.ஜெரால்டு, பேச்சாளர் சேலம் சுஜாதா ஆகியோர்  கலந்து கொண்டு பேசினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் ம.ராஜி, எஸ்.ஜெயபாலன், காயத்ரி தரன், பா.நரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் த.எத்திராஜ், ஜி.விமல்வர்ஷன், ஜெ.மகாதேவன், காஞ்சனா சுதாகர், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள் ஆர்.ஜெயசீலன், சே.பிரேம் ஆனந்த், தங்கம் முரளி, சன் பிரகாஷ், பொன் விஜயன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என்.பி.மாரிமுத்து, கே.சுரேஷ்குமார், துர்கா கோபிநாத், கு.தமிழ்செல்வி, எம்.மோகன், டி.மணிவண்ணன்,  டி.வேலுசாமி,  ஒன்றிய அணிகளின் நிர்வாகிகள் டி.சகாயம், கே.வெங்கடேசன், ஜி.பி.பரணிதரன், கேஜிஆர்.ராஜேந்திரன், கே.சுப்பிரமணி, ஆர்.ஐயப்பன், எஸ்.மீனாட்சி, எம்.இ.தியாகு, வி.சேகர், ஆர்.செந்தாமரை, ஜி.பிரவீன்குமார், பரணிதரன், எம்.உதயகுமார், அக்னி மாசெ.ராஜேஷ், மு.தே.ராஜேஷ், எஸ்.சர்மன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கே.வெங்கடேசன் நன்றி கூறினார்.

Tags : Poontamalli ,West Union ,DMK ,Minister's ,Birthday Celebration Public Meeting ,Minister ,Avadi CM Nasser , Poontamalli West Union DMK Chief Minister's Birthday Celebration Public Meeting: Minister Avadi CM Nasser provided welfare assistance
× RELATED புளியங்குடியில் பரிதாபம் டிராக்டர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி