×

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி அருகே தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி அருகே பெத்திக்குப்பத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தை தொடர்ந்து ஆலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பழைய வயர்களில் இருந்து செம்பு உள்ளிட்டவற்றை பிரித்து எடுக்கும் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Kummidipoondi ,Thiruvallur district , Thiruvallur, Kummidipoondi, factory, fire accident
× RELATED கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியத்தில்...