×

ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் தந்துவிட்டு மசோதாவுக்கு ஆளுநர் எதிர்ப்பு காட்டுவது ஏன்? : சபாநாயகர் அப்பாவு விளாசல்

சென்னை : ஆன்லைன் ரம்மி தடை அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் தந்துவிட்டு மசோதாவுக்கு ஆளுநர் எதிர்ப்பு காட்டுவது ஏன்? என்று சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, ஈ.வி.கே.எஸ்  இளங்கோவனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். 2022 அக்.1-ல் தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர்.அவசர சட்டத்துக்கும் சட்ட மசோதாவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. காலம் தாழ்த்தப்பட்டு கடைசியாக ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது. ஆளுநர்களின் உரிமைகள் குறித்து உச்சநீதிமன்றம் பலமுறை எடுத்துக் கூறியுள்ளது .மாநில அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எடுத்துக் கூறியுள்ளது. மசோதாவை நிறைவேற்ற பேரவைக்கு அதிகாரம் இல்லை என்பதை ஆளுநர் எந்த சட்டத்தின் அடிப்படையில் சொன்னார்?.ஆளுநர் குறிப்பிட்ட தீர்ப்பு 2021 ஆக.3-ம் தேதி வெளியானது; அதற்கு பின் 2022 அக்.1-ல் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் தந்தார்.

ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரம் மாநில பட்டியலில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.2022 அக் 19ல் சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டது.எடுத்தோம், கவிழ்த்தோம் என்று இந்த அரசு ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கொண்டு வரவில்லை.நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்த பிறகே ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா இயற்றப்பட்டது.ஆரம்பத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆதரவாகத்தான் ஆளுநர் இருந்தார்.ஆளுநருக்கு எங்கிருந்து எந்த அழுத்தம் வந்ததோ தெரியவில்லை.ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள், ஆளுனரை சந்தித்த பின் மசோதா தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றம் நிகழ்ந்து இருக்கலாம்.அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் தந்துவிட்டு மசோதாவுக்கு ஆளுநர் எதிர்ப்பு காட்டுவது ஏன்?.பேரவைக்கு அதிகாரம் இல்லை என சொல்லும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா என சட்டத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏதோ ஒரு அழுத்தத்தால் தான் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி இருக்கிறார்.ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு சட்டம் கொண்டுவர, சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என, எந்த சட்டத்தின் அடிப்படையில் ஆளுநர் கூறினார் என தெரியவில்லை.சட்டமன்றத்திற்கு களங்கம் ஏற்படும் வகையிலான வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்திருக்கலாம். ஆன்லைன் சூதாட்டத்தை Skill கேம் என கூறுகிறார்கள். இந்த விளையாட்டில் Skill இருப்பதாக தெரியவில்லை. தொழிலதிபர்கள்தான் ‘Skillஆக இருந்து, பொதுமக்களின் பணத்தை கொள்ளையடிக்கின்றனர்,என்றார்.



Tags : Governor ,Speaker ,Abad Vlasal , Online, Gambling, Draft, Governor
× RELATED கூச் பெஹர் பகுதியில் ஆளுநர் ஆனந்தபோஸ்...