×

கவாஜா சதத்தால் நிமிர்ந்த ஆஸ்திரேலியா

அகமதாபாத்: அகமதாபாத்தில் நேற்று தொடங்கிய 4வது டெஸ்ட்ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸி முதலில் களமிறங்கியது. இந்தூர் டெஸ்ட்டில் விளையாடிய அதே அணி ஸ்மித் தலைமையில் களம் கண்டது. இந்திய அணியில் வேகம் சிராஜிக்கு பதிலாக ஷமி களமிறக்கப்பட்டார். ஷமி வீசிய முதல் ஓவரிலேயே 10 ரன் சேர்த்த தொடக்க ஆட்டக்காரர்களான  டிராவிஸ், கவாஜா  இணை முதல் விக்கெட்டுக்கு 61ரன் சேர்த்தது. டிராவிஸ் 32 ரன் எடுத்திருந்த  போது, அஷ்வின் வெளியேற்றினார். அடுத்த வந்த லபுஷேனை 3ரன்னில் பெவிலியனுக்கு அனுப்பினார் ஷமி. அதனால்  கேப்டன் ஸ்மித், கவாஜா இணை பொறுமையாக விளையாட ஆரம்பித்தது. முதலில் சொதப்பினாலும் பின்னர்  இந்திய அணியின் பந்து வீச்சும் மிரட்டலாக இருந்தது. உணவு இடைவேளையின் போது ஆஸி 29ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 75ரன் எடுத்திருந்தது.

அதன் பிறகு ஆஸி வீரர்கள் சமாளித்து விளையாடி ஸ்கோரை உயர்த்த முயன்றனர். அதற்குள் 38ரன் எடுத்திருந்த ஸ்மித்தை போல்டாக்கினார் ஜடேஜா. கவாஜா-ஸ்மித் இணை 3வது விக்கெட்டுக்கு 69ரன் எடுத்திருந்தது. அதன் பிறகு ஆஸி மீண்டும் நிதானம் காட்டியது ஆனாலும் 17ரன் எடுத்திருந்த ஹாண்ட்ஸ்கோம்பை போல்டாக்கினார் ஷமி. அதன்பிறகு ஜோடி சேர்ந்த கவாஜா, கேமரான் இணை பொறுப்புடன் விளையாடியது. அதனால் கேமரான் அரை சதத்தை நெருங்க, முதல் நாளின் கடைசி ஓவரில் கவாஜா சதம் அடித்தார். எனவே  ஆட்ட நேர முடிவில் ஆஸி 90ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு முதல் இன்னிங்சில் 255ரன்னை எட்டியது.

Tags : Australia ,Khawaja , Australia lifted by Khawaja's century
× RELATED டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து அணிக்கு...