×

வழக்குப்பதிவு செய்ய 1,500 லஞ்சம் வாங்கிய பெண் எஸ்ஐ சஸ்பெண்ட்

அருப்புக்கோட்டை:  விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் சோபிகா. இவர் குடும்ப பிரச்னை காரணமாக அருப்புக்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்ய எஸ்ஐ சுப்புலட்சுமி பணம் கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து, சோபிகா கவரில் ரூ.1,500 வைத்து கொடுத்தாராம். ஆனால், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து விருதுநகர் ஏஎஸ்பி தருண்காரத்திடம், சோபிகா புகார் அளித்தார். இதையடுத்து ஏஎஸ்பி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை நடத்தினார். அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், சோபிகாவிடம் எஸ்ஐ லஞ்சம் வாங்கியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து எஸ்ஐ சுப்புலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க மதுரை சரக டிஐஜி பொன்னிக்கு, ஏஎஸ்பி பரிந்துரை செய்தார். இதையடுத்து எஸ்ஐ சுப்புலட்சுமி  சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.Tags : SI , Woman SI suspended for taking Rs 1,500 bribe to register case
× RELATED மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில்...