×

மகளிர் உயர மாநிலம் உயரும்: முதல்வர் டிவிட்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவு: ஊடகங்களில் ஒரு செய்தி. தலைப்பை பார்த்தால் எதிர்மறையாக இருக்கலாம்; உண்மையில் அது நேர்மறையானதே. வீடு - வணிகம் - சொத்து ஆகிய பிரிவுகளில் பல்வேறு தொழில் முனைவுகளுக்காக கடன் வாங்கும் பெண்கள் பட்டியலில், தமிழ்நாட்டு பெண்கள் இரண்டாம் இடத்திலும், தனிநபர் கடனில் முதலிடத்திலும் உள்ளனர் என்பதுதான் அந்த செய்தி. பெண்களின் சமூக பங்களிப்பு இந்தியாவிலேயே தென் மாநிலங்களில்தான் அதிகம்; அதிலும், தமிழ்நாட்டு பெண்கள் எந்தளவுக்கு பொருளாதார சுதந்திரம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் உணர்த்தும் அந்த செய்தி, சர்வதேச மகளிர் தினம் 2023ல் மகிழ்ச்சியான செய்தி. மகளிர் உயர மாநிலம் உயரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Tags : Chief Minister ,DeWitt , Women's Height State Will Rise: Chief Minister DeWitt
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...