அதிமுகவும், பாஜவும் கூட்டணி தர்மத்துடன் செயல்பட வேண்டும்: ஜி.கே.வாசன் அட்வைஸ்

வேலூர்: அதிமுகவும், பாஜவும் கூட்டணி தர்மத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று  தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். வேலூரில் தமாகா தலைவர் ஜி.கே வாசன் நேற்று அளித்த பேட்டி: அதிமுகவும் பாஜகவும் தமிழக மக்களின் நலனை கருதி இணைந்து செயல்பட வேண்டும். கூட்டணி கட்சிகளுக்குள்ளேயே நிர்வாகிகள் கட்சி மாறுவது சகஜம் தான். இதற்காக விமர்சனங்களை வைக்க கூடாது. தமிழக மக்கள் எல்லா தலைவர்களையும் எடை போட்டு வைத்திருக்கிறார்கள். ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதால் மனிதநேயத்துடன் தடுக்க புதிய சட்டங்களை கொண்டு வரவேண்டும்.  பாலியல் பலாத்கார வழக்குகளில் தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: