×

பிப்ரவரி மாத சிறந்த வீரர் போட்டியில் ஜடேஜா

துபாய்: ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி இங்கிலாந்தின் அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக், இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் வெஸ்ட் இண்டீசின் குடாகேஷ் மோதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் அதிக வாக்குகள் பெறுபவருக்கு பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருது வழங்கப்படும். அதே போல் சிறந்த வீராங்கனை விருதுக்கு போட்டியில் தென்ஆப்ரிக்காவின் லாரா வோல்வார்ட், இங்கிலாந்தின் நாட் ஸ்கிவர்-பிரண்ட், ஆஸ்திரேலியாவின் ஆஷ் கார்ட்னர் இடம் பெற்றுள்ளனர்.


Tags : Jadeja , Jadeja in Player of the Month for February
× RELATED சில்லிபாயிண்ட்…