×

மகளிர் பிரீமியர் லீக்; ஆர்சிபி-குஜராத் இன்று மோதல்: வெற்றி கணக்கை தொடங்கப்போவது யார்?

மும்பை: 5 அணிகள் பங்கேற்றுள்ள முதலாவது மகளிர் பிரீமியர் லீக் டி.20 தொடர் மும்பையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 5வதுலீக் போட்டியில், டெல்லி கேபிட்டல்ஸ்- உபி. வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன் குவித்தது. திகபட்சமாக மெக் லானிங் 70 (42பந்து), ஜெஸ் ஜோனாசென் 42 (20 பந்து) ரன் விளாசினர். பின்னர் களம் இறங்கிய உ.பி.வாரியர்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களே எடுத்தது. இதனால் டெல்லி 42 ரன் வித்தியாசத்தில் 2வது வெற்றி பெற்றது.

உபி. அணியில் தஹ்லியா மெக்ராத் நாட்அவுட்டாக 90 ரன் (50பந்து) ரன் எடுத்தார். 42 ரன் அடித்ததுடன் 3 விக்கெட் வீழ்த்திய டெல்லியின் ஜெஸ் ஜோனாசென் ஆட்டநாயகி விருது பெற்றார். இன்று இரவு 7.30 மணிக்கு பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் 6வது லீக் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதுகின்றன. மந்தனா தலைமையிலான பெங்களூரு முதல் போட்டியில் டெல்லி, 2வது போட்டியில், மும்பையிடம் தோற்ற நிலையில் இன்று வெற்றிகணக்கை தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

அதேபோல் குஜராத்தும் முதல் போட்டியில் மும்பை, 2வது போட்டியில் உபி.யிடம் தோற்ற நிலையில் முதல் வெற்றியை பெற வேண்டிய நெருக்கடியில் களம் காண்கிறது.

Tags : Women's Premier League ,RCB ,Gujarat , Women's Premier League; RCB-Gujarat clash today: Who will open the scoring?
× RELATED கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அலிஷா ஹீலி ஓய்வு