மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில் தெப்ப உற்சவம்

மதுராந்தகம்: மதுராந்தகம் நகரில் உள்ள ஸ்ரீ ஏரி காத்த ராமர் என்கிற கோதண்ட ராமர் கோயில் மாசி மகம் தெப்ப உற்சவ விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கோயில் குளத்தில் மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் கருணாகரபெருமாள், ஸ்ரீதேவி - பூதேவி எழுந்தருளினர். இதனை தொடர்ந்து, கோயில் குளத்தில் 3 முறை வலம் வந்து கூடியிருந்த இருந்த பக்தர்களுக்கு காட்சியளித்தனர். குளத்தின் 4 கரைகளிலும் கூடியிருந்த திரளான பக்தர்கள், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என கோஷம் எழுப்பி இறைவனை வழிபட்டனர். இந்த விழாவில் மதுராந்தகம் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் கோயில் செயல் அலுவலர் தா.மேகவண்ணன், பணியாளர் மதுரை மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: