×
Saravana Stores

மதுராந்தகம் அருகே கருங்குழியில் நடைபெற்ற சந்தனக்கூடு நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்பு

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே கருங்குழி பகுதி சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையொட்டி உள்ள ஹஸ்ரத் சையத் அவுலியா தர்காவில் சந்தனக்கூடு நிகழ்ச்சி அவுலியாவின் புனித மஸார் ஷரீபில் பீடத்தில் சந்தனக்கூடு விழா ஆதீன பாரம்பரிய தர்மகத்தா சையத் அஹமது ஏற்பாட்டில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சந்தனக்கூடு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தொழுகையில் ஈடுபட்டார்.

இதில், இஸ்லாமியர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது வேண்டுதலை முன்வைத்து தர்காவில் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து, சந்தனக்கூடு ஊர்வலமானது சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக கருங்குழி பஜார் பகுதி வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பிரியாணி அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

 

The post மதுராந்தகம் அருகே கருங்குழியில் நடைபெற்ற சந்தனக்கூடு நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Karunkhuzi ,Madhurandakam ,Madhuranthakam ,Sandalwood ceremony ,Hazrat Syed Auliya Dargah ,Chengalpattu district ,Auliya ,Mazar Sharif ,
× RELATED கருங்குழி ரயில்நிலையம் அருகில்...