டெல்லி: பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிடம் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்துகின்றனர். பீகாரில் உள்ள வீட்டில் லாலுவின் மனைவி ராப்ரி தேவியிடம் சிபிஐ நேற்று விசாரணை நடத்தியிருந்தது. ரயில்வேயில் வேலை வழங்கியது தொடர்பான மோசடி வழக்கில் லாலு பிரசாத்திடம் சிபிஐ விசாரணை நடத்துகிறது.
