×

62-வது தமிழ்நாடு காவல் மண்டலங்களுக்கு இடையேயான தடகள போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது சென்னை காவல்துறை அணி

சென்னை: 62-வது தமிழ்நாடு காவல் மண்டலங்களுக்கு இடையேயான தடகள போட்டியில் சென்னை பெருநகர காவல்துறை அணி 21 தங்கப்பதக்கங்கள், 16 வெள்ளி பதக்கங்கள், 10 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 47 பதக்கங்கள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றதையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் தடகள வீரர், வீராங்கனைகளை வாழ்த்தினார்.

62-வது தமிழ்நாடு காவல் மண்டலங்களுக்கு இடையேயான தடகள போட்டி 2023 (62nd TamilNadu Police Inter Zonal Athletic Meet 2023) போட்டி, திருச்சி, அண்ணா ஸ்டேடியத்தில், 03.03.2023 முதல் 05.03.2023 வரை நடைபெற்றது. இப்போட்டியில் ஓட்ட பந்தயம், தடை தாண்டும் ஓட்டம், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், டிரிபிள் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், கம்பு ஊன்றி தாண்டுதல், மாரத்தான், டெக்கத்லான் ஆகிய போட்டிகள், ஆண் மற்றும் பெண்கள் பிரிவுகளுக்கென தனித்தனியாக தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில், சென்னை பெருநகர காவல்துறை, ஆவடி காவல் ஆணையரகம், தாம்பரம் காவல் ஆணையரகம், வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், ஆயுதப்படை, தமிழ்நாடு கமாண்டோ படை (TNCF) என 9 அணிகள் கலந்து கொண்டன.

இப்போட்டியில், சென்னை பெருநகர காவல் அணியின் ஆண்கள் அணியினர் 7 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களும், பெண்கள் அணியினர் 14 தங்கம், 9 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என 29 பதக்கங்களும் என மொத்தம் சென்னை பெருநகர காவல் தடகள அணியினர் 21 தங்கப்பதக்கங்கள், 16 வெள்ளி பதக்கங்கள், 10 வெண்கல பதக்கங்கள் என 47 பதக்கங்கள் பெற்று, சென்னை பெருநகர காவல் அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்திற்கான கேடயம் பெற்று, சென்னை பெருநகர காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளது. மேலும், பெண்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தில் சென்னை பெருநகர காவல் அணியினர் முதலிடம் பெற்றும், ஆண்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தில் சென்னை பெருநகர காவல் அணியினர் 2-ம் இடமும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Chennai Police team ,Tamil Nadu Inter-Zoneal Athletics Tournament , The Chennai Police team was crowned the champion in the 62nd Tamil Nadu Inter-Zoneal Athletics Tournament
× RELATED 63வது தடகள போட்டியில் 45 பதக்கங்கள்...