சாத்தான்குளத்தில் பரபரப்பு; பிரியாணியில் இறந்து கிடந்த பூரான்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் கடை ஒன்றில் சாப்பிட்ட பிரியாணியில் பூரான் கிடக்கும் வீடியோ வலை தளங்களில் வைரலாகி வருவது பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் விரும்பி உண்ணக்கூடிய உணவாக பிரியாணி உள்ளது. ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களின் வருகைக்குப் பின் தற்போது உணவை தேடி விருப்பமான சுவையில் சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உணவு குறித்த தகவல்கள் அதிகம் கிடைப்பது, எங்கு என்ன சுவையில், எவ்வளவு விலையில் கிடைக்கிறது என்ற தகவல் எளிதாக கிடைக்கிறது.

இதனால் உணவு பிரியர்கள் தங்கள் விருப்பப்பட்ட உணவுகளை விரும்பி ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர்.இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும், பலவகையான உணவுப் பழக்கம் இருந்தாலும், பிரியாணி பொதுவான உணவாக உள்ளது. இதனால் பிரியாணி பலரும் விரும்பி உண்ணும் உணவாக உள்ளது. இதில் சைவம், அசைவம் என பிரியாணியை ஆர்டர் செய்பவர்களின் எண்ணிக்கை மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகம் ஆர்டர் செய்யும் உணவு பட்டியலில் பிரியாணி முதலிடத்தில் இருந்தாலும் சில நேரங்களில் தரமற்ற வகையில் வழங்கப்படும் பிரியாணியால் தொடர் சர்ச்சைகளும் நிலவி வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் உள்ள ஒரு கடையில் வாடிக்கையாளர் ஒருவர் பிரியாணி ஆர்டர் செய்த நிலையில், கொண்டு வரப்பட்ட பிரியாணியில் கருப்பு நிறத்தில் பூராண் இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து அவர் கடைகாரரிடம் கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்படுகிறது. எனவே  உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் சாத்தான்குளம் பகுதி ஹோட்டல் மற்றும்  உணவு சார்ந்த கடைகளில் ஆய்வு நடத்திட வேண்டும்.  உணவு பாதுகாப்பு இல்லாமலும், ஹோட்டல்கள்  சுகாதாரம் குறைவாக இருந்தால் அவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும் என சமூக  ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: