×

சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் சுற்றித்திரிந்த மான் மீட்பு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் பஜாரில் சுற்றி திரிந்த மானை பொதுமக்கள் மீட்டு பாதுகாத்து வருகின்றனர். சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் பேய்க்குளத்தில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் இன்று காலை கடையை திறக்க வந்தபோது அங்கு புள்ளி மான் ஒன்று சுற்றி திரிந்துள்ளது. அதனைப் பார்த்த தெரு நாய்கள் மானை துரத்தி உள்ளன.

உடனடியாக தர்மராஜ் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து நாய்களை விரட்டியதோடு மானை பத்திரமாக மீட்டு பாதுகாப்புடன் வைத்துள்ளனர். இதுகுறித்து திருச்செந்தூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் மூலம் மானை காட்டு பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வருவாய் துறை மற்றும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பேய்குளத்திற்கு வந்த மானை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

The post சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் சுற்றித்திரிந்த மான் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Satankulam ,Baikulam ,Dharmaraj ,Bayikulam ,Satanakulam ,Dinakaran ,
× RELATED விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்