கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கூட பேசி விடலாம் சீன ஊடுருவலை இந்திய நாடாளுமன்றத்தில் பேச முடியாது: ஒன்றிய அரசின் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

லண்டன்: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கூட உரையாற்றலாம்; ஆனால் இந்திய நாடாளுமன்றத்தில் பேசிவிட முடியாது என்று லண்டனில் ராகுல்காந்தி கூறினார்.இங்கிலாந்து சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். தொடர்ந்து வெளிநாடுவாழ் இந்தியர்கள் மத்தியில் அவர் பேசுகையில், ‘கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நீங்கள் உரையாற்றலாம்; ஆனால் இந்தியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேச முடியாது என்பது வெட்கக்கேடானது. இந்திய எல்லைக்குள் சீன ராணுவ ஊடுருவல் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி பேச அவையில் அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு நாள் தானும் அவரது 10 நண்பர்களும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த நபரை அடித்ததாகவும், அன்று அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் சாவர்க்கர் தனது புத்தகம் ஒன்றில் எழுதியுள்ளார். ஒரு மனிதனை கும்பலாக சேர்ந்து அடித்தால், அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்றால் அதனை கோழைத்தனம் என்று தானே கூறமுடியும்.

அவர்கள் (பாஜக) என்னை எவ்வளவு அதிகமாக தாக்குகிறார்களோ, அந்த அளவுக்கு நான் கற்றுக்கொள்கிறேன். இது மரியாதைக்கும் அவமரியாதைக்கும் இடையிலான போராட்டம். அன்புக்கும், வெறுப்புக்கும் இடையிலான போராட்டம். சீனா குறித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசியதை பார்த்தால், சீனா நம்மை விட மிகவும் சக்தி வாய்ந்தது என்பது தெரிகிறது. அவர்களை நாம் எப்படி எதிர்த்துப் போராட முடியும்? என்பது குறித்து தெளிவான பதில் இல்லை. அவர்களின் (பாஜக) சித்தாந்தத்தில் கோழைத்தனம் உள்ளது. இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் மூலம், நாட்டில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் அறிந்து கொள்ள முடிந்தது. இந்தியாவில் இன்று மூன்று பெரிய பிரச்னைகள் உள்ளன. அதாவது வேலையின்மை, விலைவாசி உயர்வு, பெண்களுக்கு எதிரான வன்முறை ஆகியனவாகும். ஊடகங்களில், பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர் சல்மான் கான், கிரிக்கெட் ஆகியவற்றைப் பார்க்கிறோம்; ஆனால் உண்மையான பிரச்னைகளை நாம் பார்ப்பதில்லை’ என்றார்.

Related Stories: