×

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி; பீகாரில் ஒருவர் கைது; புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அச்சப்படும் சூழ்நிலை ஏதும் இல்லை: பீகார் காவல்துறை விளக்கம்

பாட்னா: புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியவர் பீகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். பீகார் மாநிலம் ஜமுயீ நகரைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் இயக்குநர் ஜிதேந்திர சிங் கங்குவார் தகவல் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து திட்டமிட்டு வதந்தி பரப்பப்பட்டு வருகிறது என பீகார் காவல்துறை விளக்கமளித்துள்ளது. பொய்ச் செய்தியை பகிர்ந்தவர்கள் மற்றும் பரப்பிய விஷமிகள் அனைவரும் கைது செய்யப்படுவர் என பீகார் போலீஸ் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ சமூக வலை தளங்களில் கடந்த சில நாட்கள் முன்பு பரவியதால் பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சியினர் அங்குள்ள சட்டசபையில் இதுகுறித்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.  

ஆனால், தமிழக அரசும், காவல்துறையும் மறுப்பு தெரிவித்து, வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் வதந்திகளை பரப்பியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்ய தனிப்படைகளும் அமைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ போலியானது என பீகார் துணை முதல்வர் கூறியிருந்தார். இதுபோன்ற போலியான வீடியோ, பாஜகவினர் திட்டமிட்டு பரப்புவதாக குற்றசாட்டினார். இருப்பினும், உண்மை நிலையை கண்டறியும் வகையில் பீகாரில் இருந்து உயர் அதிகாரிகள் சென்னை வந்து தமிழக அதிகாரிகளிடம் நடந்த விசயங்களை கேட்டறிந்தனர்.

இதையடுத்து, பீகாரில் இருந்து லோக் ஜன சக்தி கட்சித் (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பஸ்வான் எம்.பி. இன்று விமானம் மூலம் சென்னை வந்த அவர், பல்லாவரம், தாம்பரம் மற்றும் புறநகரில் உள்ள பீகார் தொழிலாளர்களை சந்தித்து தமிழகத்தில் நிலவும் நிலைமைகளை குறித்து கேட்டறிந்தார்.  இதன்பின் பேசிய சிராக் பஸ்வான் எம்.பி., பீகார் – தமிழ்நாடு இடையே நிலவும் நல்லுறவை கெடுக்க சிலர் முயற்சி செய்கின்றனர். சமூக வலைத்தளத்தில் போலி தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியவர் பீகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து திட்டமிட்டு வதந்தி பரப்பப்பட்டு வருகிறது என பீகார் காவல்துறை விளக்கமளித்துள்ளது. பொய்ச் செய்தியை பகிர்ந்தவர்கள் மற்றும் பரப்பிய விஷமிகள் அனைவரும் கைது செய்யப்படுவர் என பீகார் போலீஸ் தெரிவித்துள்ளது.


Tags : Bihar ,Bihar Police , Rumors about migrant workers; One arrested in Bihar; No fear in migrant workers issue: Bihar Police statement
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...