இ-சிகரெட்களின் பிடியிலிருந்து இளைஞர்களை மீட்க வேண்டும் : அன்புமணி ராமதாஸ் வலியுத்தல்

சென்னை: ஆபத்தான இ-சிகரெட்களின் பிடியிலிருந்து இளைஞர்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டவிரோத இ-சிகரெட்டுகள் விற்பனைக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக முடிவு கட்ட வேண்டும்.

இந்தச் சிகரெட் புகையிலையை பயன்படுத்தாது. இதற்கு மாறாக ஒரு ஆவியாகும் தன்மை கொண்ட கரைசல் வேதிப் பொருளை பயன்படுத்துகிறது. இதில் நிக்கோடின், புரோப்லீன் கிளைகால் உள்ளிட்ட மூலப்பொருட்கள் இருக்கும். உலக அளவில் புகையிலையை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் 26.8 கோடி மக்களுடன் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது. இதற்கிடையே இ-சிகரெட் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்துள்ளது.

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள், புகையிலைப் பொருட்களால் ஆண்டுதோறும் உயிரிழப்பைச் சந்திக்கின்றனர். அவற்றில் முக்கியமானது சிகரெட். ஆனால் சிகரெட்டைப் போல நெருப்பு கிடையாது. சாம்பல், புகை வெளியே வராது. துர்நாற்றம் வீசாது. கேடு விளைவிக்காது, புகைப்பழக்கத்தில் இருந்து மக்களை விடுவிக்கும் என்று கவர்ச்சிகரமான வார்த்தைகள் மூலம் இ-சிகரெட் விற்பனை தொடங்கியது.

பெரும்பாலும் வழக்கமான சிகரெட் போன்ற வடிவத்திலேயே இருக்கும் இ- சிகரெட், இரு பகுதிகளைக் கொண்டிருக்கும். ஒரு பகுதியில் திரவ வடிவிலான நிகோடினும் மறு பகுதியில் பேட்டரியும் இருக்கும். பேட்டரியில் உள்ள பொத்தானை அழுத்தும்போது திரவ நிகோடின், ஆவி நிலைக்கு மாறி பயன்படுத்துபவரின் தொண்டைக்குள் இறங்கும். இ-சிகரெட்டைப் பயன்படுத்துபவர் நிகோடின் புகையை உள்ளிழுத்து வெளியே விடுவதால் புகை பிடிக்கும்போது ஏற்படும் அதே உணர்வை இதிலும் பெறுவார். இந்த நிலை வேப்பிங் (Vaping) என்று அழைக்கப்படுகிறது.

இ-சிகரெட்டில் உள்ள நிகோடின், இ-திரவம் என்று அழைக்கப்படுகிறது. இதில் நிகோடின் உடன், புரொப்பலின் கிளைகால், கிளிசரின், கன உலோகங்கள், சுவையூட்டிகள் போன்றவை நிரப்பப்பட்டிருக்கும். இவற்றால் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். இ-திரவம் பயனாளிகளின் தேவைக்கேற்ப சாக்லேட், பழங்கள், காபி சுவைகளில் உருவாக்கப்பட்டிருக்கும்.

பேனா, குழல், சிகரெட், பென் டிரைவ் என பல்வேறு வடிவங்களில் இ-சிகரெட்டுகள் உருவாக்கப்படுகின்றன. இவை ஆன்லைனிலும் விற்பனையாகின்றன. இ-சிகரெட் ஏற்படுத்தும் அபாயங்கள் குறித்து 2014-ல் உலக சுகாதார நிறுவனம், ஆய்வறிக்கையை அளித்து உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தது. இ-சிகரெட்டின் ஆபத்து குறித்து தெரியவந்த பிறகே, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அவற்றைத் தடை செய்தன. இந்தியாவிலும் இதற்கு 16 மாநிலங்கள் தடை விதித்துத்துள்ளது.

Related Stories: