×

அதிமுக சார்பில் 10, 11, 12ல் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம்: சிவகங்கையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று முதல் 7ம் தேதி வரை மற்றும் 10,11,12 ஆகிய 6 நாட்கள் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சட்டமன்ற தொகுதிகளிலும், பிற மாநிலங்களிலும் நடைபெறுகிறது. இன்று முதல் 7ம் தேதி வரை நடைபெறும் பொதுக்கூட்டங்களுக்கான பட்டியல், கடந்த பிப். 26ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மார்ச் 10,11,12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்கள் மற்றும் அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்களும் வெளியிடப்பட்டது.

அதிமுக எம்எல்ஏக்கள், அதிமுக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகளும், தாங்கள் சார்ந்த தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள். மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டங்களை, அதிமுகவின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு பிறந்தநாள் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.

Tags : Jayalalithah ,Birthday ,Adhikshaga ,Edapadi Palanisamy ,Sivaganga , Jayalalitha's birthday rally on 10th, 11th, 12th on behalf of AIADMK: Edappadi Palaniswami participates in Sivagangai
× RELATED அன்புமணியால்தான் பாஜவுடன் கூட்டணி: ராமதாஸ் விரக்தி