×

திருவாரூர் அரசு மருத்துவமனையில் சுகாதார பணிகள் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு: கழிவுநீர் தேங்குவதை தடுக்க அறிவுறுத்தல்

திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீர் தேங்குவதை தடுத்திட வேண்டுமென கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் சுகாதார பணிகள் குறித்து கலெக்டர் சாரு நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் ரூ.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, பேறுகால அவசர சிகிச்சை பிரிவு மற்றும் சிசு தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு செய்தார்.

மேலும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடத்திய ஆய்வின்போது, கழிவுநீர் உரிய முறையில் வடிகால் மூலமாக செல்லாமல் வளாகத்திற்குள் தேங்கியதை பார்வையிட்ட கலெக்டர் அவ்வாறு வளாகத்திற்குள் கழிவுநீர் தேங்காமல் உரிய முறையில் வடிகால் மூலமாக கொண்டு செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி டீன் ஜோசப்ராஜிடம் தெரிவித்தார். ஆய்வின்போது ஆர்டிஓ சங்கீதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Tiruvarur Government Hospital , Collector in person inspection of sanitary works in Tiruvarur Government Hospital: Instruction to prevent backlog of sewage
× RELATED ₹13 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற...