நாமக்கல் அழகுநகர் பகுதி அரசு பள்ளியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு : குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்!!

நாமக்கல் : தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல்லில் அரசு பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார். முதல்வரின் ‘‘காலை உணவு திட்டம்’’ தமிழ்நாடு முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் அழகு நகரில் உள்ள தொடக்கப் பள்ளியில், முதல்மைச்சர் காலை உணவு திட்டம் குறித்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நலத்துறை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது அங்குள்ள பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காலை உணவு சாப்பிட்டார். அவருடன் அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோரும் காலை உணவு சாப்பிட்டார். பின்னர் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின்,நாமக்கல் மாவட்டம் அழகு நகர் பகுதி அரசு தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை இன்று ஆய்வு செய்தோம். மாணவர்களுடன் உணவருந்தி, உணவு தரமாகவும் சுவையாகவும் வழங்கப்படுவதை உறுதிசெய்து, இத்திட்டத்தால் அதிகரித்துள்ள மாணவர் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தோம்.

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் குறித்து நாமக்கல் நகராட்சி அழகு நகர் அரசு தொடக்கப்பள்ளியில் இன்று ஆய்வின்போது, வகுப்பறைக்கு சென்று அரசின் சொத்தாக திகழும் பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடியது மனதிற்கு மகிழ்வைத் தந்தது. அவர்களுக்கு என் அன்பை தெரிவித்து மகிழ்ந்தேன், எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories: